"கழுதையுடன் வாக்குவாதம் செய்யாதே" கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!" என்று கூறியது. புலி கோபமடைந்து,"இல்லை, புல் பச்சை!" என்று கூறியது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர், எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர். சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, "அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?" என்று கேட்டது. சிங்கம், "உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது. கழுதை விரைந்து தொடர்ந்தது, "புலி என்னுடன் உடன்படவில்லை••• முரண்படுகிறது•• அரசே•••! என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்." என்று கூறியது. அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும் பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும்••• இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது. கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, "புல் நீலநிறமானது!" , "புல் நீலநிறமானது!" ...