வெ. இறையன்புவின் *கேள்வியும் நானே பதிலும் நானே!* நூலிலிருந்து சில சுவாரஸ்ய கேள்விகள்
வெ. இறையன்புவின் *கேள்வியும் நானே பதிலும் நானே!* நூலிலிருந்து சில சுவாரஸ்ய கேள்விகள். 💥💥எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது? நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்! 💥💥 எது சிறந்த உதவி? செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது! 💥💥 நமக்கு நாமே எதிரியாவது எப்போது? உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம். 💥💥 மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்? தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது! 💥💥 குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன? இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை., 💥💥 நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? மௌனத்தை… 💥💥 அன்பு முக்கியமா… அறம் முக்கியமா? அறத்துக்கும் அன்பே ஆதாரம்! 💥💥 நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகள...