பள்ளிகளில் நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
நிலா சிறார் திரைப்படம் (சுருக்கம்)
படத்தின் பெயர்: நிலா
எழுத்து, இயக்கம்:ஞாநி
நடிப்பு: நாசர் மற்றும் பலர்.
கதை: மன்னன் (நாசர்) மகள் (6 வயது) கயல்விழி கடலை உருண்டைகளை அதிகமாகச் சாப்பிட்டு உடல்நலமற்று இருப்பாள். மருத்துவர் அவளுக்கு மருந்து கொடுத்து விட்டு மன்னரிடம் இளவரசியின் மனக்குறையைப் பூர்த்தி செய்தால் தான் உடல் நலம் முழுமையாக கிடைக்கும் என்று கூறுவார். மன்னர் மகளிடம் என்ன வேண்டும்? என்று கேட்க "நிலா" வேண்டும் என்று கூறுவாள். உடனே மன்னர்- அமைச்சர், மந்திரவாதி, கணித வல்லுனர் ஆகியோரிடம் கேட்க, ஒவ்வொருவரும் நிலவின் தூரம், கருப்பொருள், அளவு பற்றி விதவிதமாகக் கூறி நிலவைப் பிடித்து வரமுடியாது என்பர். பிறகு மன்னர் கோமாளியைக் கேட்பார். கோமாளி இளவரசியிடம் கேட்பார். இளவரசி நிலா மரத்தின் பின்னால் உள்ளதாகவும், கட்டைவிரலில் பாதியளவு இருக்கும், தங்கத்தால் ஆனது என்றும் கூறுவாள். உடனே கோமாளி பொற்கொல்லரிடம் செய்யச் சொல்லி தங்கச் சங்கிலியில் தங்க உருண்டையைக் கோர்த்து நிலா இதோ என்று இளவரசியிடம் கொடுக்க இளவரசியும் மகிழ்ச்சியாகப் போட்டுக் கொள்வாள். ஆனால் மன்னரும் மற்றோரும் இரவில் மீண்டும் நிலா தெரியுமே அப்போது இளவரசி தான் ஏமாற்றப் பட்டதாக நினைப்பாளே என்று சஞ்சலம் அடைவர். ஆனால் கோமாளி இதைப் பற்றி இளவரசியிடமே கேட்போம் என்று இளவரசியிடம் கேட்க இளவரசியும் ஒரு பல் விழுந்தால் மீண்டும் அங்கே பல் முளைப்பது போல ஒரு நிலா என்னிடம் உள்ளது. அடுத்த நிலா வந்து விட்டது என்று கூறுவாள்.
விமர்சனம்: நிலா திரைப்படம்
எழுத்தும், நடிப்பும் அருமை.படம் 24 நிமிடங்கள். குறும்படம் ஆதலால் சலிப்பில்லை.
கருத்து:
பெரியவர்கள் சிக்கலாக எண்ணி ஆராயும் விடயத்தை, குழந்தைகள் அவர்களது கண்ணோட்டத்தில் எளிமையாகக் கையாள்வர் என்பதை விளக்கும் படம். குழந்தைப் பருவத்தில் குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ வழி செய்வோம்!
DOWNLOAD NILA MOVIE POSTER HERE
0 Comments