குடியரசு தின வாழ்த்து கவிதை-1
சமத்துவம் தொடர்ந்து
சம உரிமை நீடித்து
பாரதம் செழித்துமக்கள் வாழ்வு சிறக்க
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை-2
போன்றதே தாய் நாட்டின்
மீதான பாசமும்
தாயை நேசிப்போம்
தாய் நாட்டை
மூச்சாய் சுவாசிப்போம்
குடியரசு தின வாழ்த்து கவிதை- 3
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ்நாடு
என்று சொல்லடா என் நாமம்
இந்தியன் என்றே என்றும் நில்லடா
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
வந்தே மாதரம்!
குடியரசு தின வாழ்த்து கவிதை- 4
வார்த்தைகளில் உண்மையும்
இதயத்தில் அமைதியும்
நினைவுகளில் சரித்திரமும்
நிறைந்திருக்கும் இத்தருணத்தில்
தாய் மண்ணே உனை வணங்குகிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை-5
தன் உயிரை துச்சம் என எண்ணி
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்
குடியரசு தின வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை- 6
அடிமைத்தனத்தின் முற்று!
சமத்துவத்தின் சான்று!
உதிரம் சிந்தி, உயிர் நீத்து
அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!
தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக
தியாகிகளின் தியாக தினம்!
குடியரசு தின வாழ்த்து கவிதை-7
மக்களால் உண்டானது குடியரசு!
நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,
சகோதரத்துவம் பழகி, சுதந்திரம் உன்னதம் உணர்வோம்!
வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம்
தனித்துவத்தை மேலும் வலுவாக்குவோம்!
மனிதம் போற்றுவோம்!
இந்தியராய் என்றும் இணைவோம்!!
குடியரசு தின வாழ்த்து கவிதை-8
குடியரசு தின வாழ்த்து கவிதை - 9
குடியரசு தின வாழ்த்து கவிதை-10
தேசபக்தி - குடியரசு தின வாழ்த்து கவிதை
நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..
கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..
பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....
தியாகிகள் பெருமை நினைந்து
தினம்பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ் உயர்த்துவதே தேசபக்தி !.....
இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..
குடியரசு தின வாழ்த்துகள்!!!!
