குடியரசு தின வாழ்த்து கவிதை-1
சமத்துவம் தொடர்ந்து
சம உரிமை நீடித்து
பாரதம் செழித்துமக்கள் வாழ்வு சிறக்க
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை-2
தாய் மீதான பாசம்
போன்றதே தாய் நாட்டின்
மீதான பாசமும்
தாயை நேசிப்போம்
தாய் நாட்டை
மூச்சாய் சுவாசிப்போம்
குடியரசு தின வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை- 3
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ்நாடு
என்று சொல்லடா என் நாமம்
இந்தியன் என்றே என்றும் நில்லடா
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
வந்தே மாதரம்!
குடியரசு தின வாழ்த்து கவிதை- 4
எண்ணங்களில் சுதந்திரமும்
வார்த்தைகளில் உண்மையும்
இதயத்தில் அமைதியும்
நினைவுகளில் சரித்திரமும்
நிறைந்திருக்கும் இத்தருணத்தில்
தாய் மண்ணே உனை வணங்குகிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை-5
அடிமைப்பட்டு போன தாய் நாட்டை
தன் உயிரை துச்சம் என எண்ணி
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்
குடியரசு தின வாழ்த்துக்கள்!!!
குடியரசு தின வாழ்த்து கவிதை- 6
அகிம்சையின் வெற்றி அடையாளம்!
அடிமைத்தனத்தின் முற்று!
சமத்துவத்தின் சான்று!
உதிரம் சிந்தி, உயிர் நீத்து
போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!
அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!
தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக
தம்மையே அர்ப்பணித்த
தியாகிகளின் தியாக தினம்!
குடியரசு தின வாழ்த்து கவிதை-7
அரசர்தம் கொண்டது முடியரசு!
மக்களால் உண்டானது குடியரசு!
நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,
சகோதரத்துவம் பழகி, சுதந்திரம் உன்னதம் உணர்வோம்!
வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம்
தனித்துவத்தை மேலும் வலுவாக்குவோம்!
மனிதம் போற்றுவோம்!
இந்தியராய் என்றும் இணைவோம்!!
குடியரசு தின வாழ்த்து கவிதை-8
பாரத தாயின் புகழை உயர்த்த,
அமைதி, அன்பு, சகோதரத்துவம்
ஆகியவற்றை வளர்ப்போம்
இந்தியாவின் ஒற்றுமையும்
வளமையும் நிலைத்திட,
நம் பங்கு நிறைவேற்போம்.
குடியரசு தின நல்வாழ்த்துகள்.
குடியரசு தின வாழ்த்து கவிதை - 9
அடிமைப்பட்டு வாழ்ந்த தாய்நாட்டை
தன் உயிரை துச்சமாக எண்ணி
போராடி சுதந்திரம் பெற்றுத்
தந்த தலைவர்களையும் வீரர்களையும்
நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும்
நாளே குடியரசுத் தினம்.
குடியரசுத் தின வாழ்த்துக்கள்.
குடியரசு தின வாழ்த்து கவிதை-10
தேசபக்தி - குடியரசு தின வாழ்த்து கவிதை
நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..
கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..
பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....
தியாகிகள் பெருமை நினைந்து
தினம்பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ் உயர்த்துவதே தேசபக்தி !.....
இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..
குடியரசு தின வாழ்த்துகள்!!!!
0 Comments