Posts

தேன் சிட்டு இதழ்-01

Image
கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்.. கதைகள்,கட்டுரைகள், பாடல்கள், வரைந்து பார்க்க,செய்து பார்க்க,என பல்வேறு அனுபவங்களை அளிக்க பறந்து வந்துள்ளது இந்த தேன்சிட்டு இதழ்.  6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் துணைபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதோ நம் தேன்சிட்டு இதழ்.. Download here.

தன்னம்பிக்கை கதைகள்-4

Image
                      "கழுதையுடன் வாக்குவாதம் செய்யாதே" கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!"  என்று கூறியது. புலி கோபமடைந்து,"இல்லை, புல் பச்சை!"  என்று கூறியது. விவாதம் சூடுபிடித்தது,  இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர்,  எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர். சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை,  "அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?"  என்று கேட்டது. சிங்கம், "உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது.   கழுதை விரைந்து தொடர்ந்தது,  "புலி என்னுடன் உடன்படவில்லை••• முரண்படுகிறது•• அரசே•••! என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."  என்று கூறியது. அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும்  பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும்•••  இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது.  கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து,  "புல் நீலநிறமானது!"  , "புல் நீலநிறமானது!" ...

புது ஊஞ்சல் இதழ்-01

Image
குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை  ஏற்படுத்தித் தரும் எந்தப் புத்தகமும் சிறந்த புத்தகமே...!  அந்த வகையில் தமிழக அரசின் புதிய முயற்சியாக வெளிவந்துள்ள மூன்று இதழ்கள்.. மாணவர்களின் வாசிப்புத்திறனை மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த இதழ்கள் நிச்சயம் அதன் நோக்கத்தை வென்றெடுக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்காக உழைத்துள்ள அத்துனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.. 3-5 ம் வகுப்பு மாணவர்களுக்கானது.  இதழ் -01 புது ஊஞ்சல் 

தன்னம்பிக்கை கதைகள்-3

Image
                                                                                                  கண்ணால் காண்பது பொய் ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம்.  ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது;  காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது. ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளறும் போது முதலாளி அதனைக் கண்டார்.  ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரி...

தனனம்பிக்கை கதைகள்-2 (எடிசன்)

Image
                                           உலகை மாற்றிய எடிசன் இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு, அவனின் அறிவும் சிந்தனையும் அதைவிட முக்கியமாய் மானிடம் பயனுற ஏதாவது செய்தாக வேண்டும் எனும் பெரும் விருப்பமும் அவரிடம் இருந்தது. அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம் ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம் ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு வாசிக்க கற்றுகொடுத்தார், அப்பா மரவியாபாரி கணக்கு பார்க்க கற்றுகொடுத்தார் இவ்வளவுதான் படிப்பு. அவர் வாசித்ததெல்லாம் நியூட்டனும், பாரடேயும். ஆயினும் பிழைக்க வேண்டுமே ரயில் நினையத்தில் தந்தி அடிக்கும் வேலைக்கு சென்றார், அங்கும் ஆய்வு செய்கின்றேன் என எதனையோ ...

தன்னம்பிக்கை கதைகள்-1

Image
                                           தன்னம்பிக்கையின் சக்தி வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது. "கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார். தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது ...

நேரிய இணைக்கோணங்கள் 180° MATHS CLUB ACTIVITY -2

Image
    நேர்கோட்டின் மீது அமையும் அடுத்துள்ள கோண இணைகள் நேரிய கோண இணைகள் எனப்படும் ஒரு நேரிய கோணத்தின் மற்றொரு இணையை கண்டறிய மாணவர்களுக்கு இந்த இலை செயல்பாடு பயன்படுகிறது. முதலில் இலைகளிலுள்ள நேரிய கோணங்கள் பற்றி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட செயல்பாடு மாணவர்களால் செய்யப்பட்டது . இதன்மூலம் நேரிய கோண இணைகள் பற்றி தெளிவாக மாணவர்கள் அறிய முடிந்தது. மீண்டும் ஓர் அழகிய கணித பதிவில் மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.