மரங்களை நடும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவிடுகள்.
👉வேப்பம் மரம் 15' ×15'
👉பனை மரம். 10'×10'
👉பாக்கு மரம். 10'×10'
👉மலைவேம்பு மரம் .10'×10'
👉சந்தன மரம். 15'×15'
👉வாழை மரம். 8'×8'
👉தென்னை மரம். 24'×24'
👉பப்பாளி மரம். 7'×7'
👉மாமரம் உயர் ரகம். 30'×30'
👉மாமரம் சிறிய ரகம் 15'×15'
👉பலா மரம். 22'×22'
👉கொய்யா. 14'×14'
👉மாதுளை. 9'×9'
👉சப்போட்டா மரம். 24'×24'
👉முந்திரி மரம். 14'*14'
👉முருங்கை மரம். 12'×12'
👉நாவல் மரம். 30'×30'
இவ்வகையான
இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பது பல நூல்களும் நமக்கு கூறுகிறது
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!
என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரிய பின் பற்றி வந்து இருக்கிறார்கள்
#இடைவெளி அமைப்பதின் பயன்கள் !
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்றாக பரப்பி வளர முடிகிறது
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும் .
இதன்பின் காய்த்தாலும் திரட்சி இல்லாமல் காய்கள் சிறியதாக இருக்கும் . மரதேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால்
மரங்கள் குறைந்த உயரத்தில் அதோடு காய்கள் நன்கு பெறுத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
மரங்கள் அழிவதை தடுக்க நம்மால் முடிந்த முதல் வழி பேப்பர் உபயோகத்தை கட்டுப்படுத்துவது.
பேப்பர்களை பிரின்ட் எடுப்பதை தவிர்த்து ஈ செல்லான ஈ டிக்கெட் போன்ற மின்னணு முறைகளுக்கு மாறுவது.
தேவையற்றவைகளை பிரின்ட் எடுப்பது தவிர்த்துக் கொள்வது.
மர பர்னிச்சர்களுக்கு பதில் கடினமான மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் வகை பர்னிச்சர்களை பயன்படுத்தலாம்.
ஆயிரக்கணக்கான மரங்களை விளம்பரத்திற்காக நடாமல் சில நூறு மரங்களை நட்டு அது தானாகவே தன்னைக் காத்துக் கொள்ளும் நிலை வரும் வரை அதை நீரூறறி பராமரிக்க வேண்டும்.
வீடுகள் கட்டும்போது மர தளவாட பொருட்களை உபயோகப்படுத்தாமல் இரும்பில் வரும் தளவாட பொருட்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் இடத்திற்கேற்ப சின்னஞ்சிறு பூச்செடிகள் முதல் வீட்டிற்குள்ளேயே வளர்க்கக்கூடிய தாவரங்களையும் பெரிய இடம் உள்ளவர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெரு மரங்களிலிருந்து செடி கொடி தோட்டம் என அவரவர் ரசனைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். இதனால் சிறிய அளவிலாவது பிராண வாயுவின் உற்பத்தி கிடைக்கும்.
ஏர்போர்ட்டில் இருந்து உரிய கடவு சீட்டு இல்லாமல் எப்படி ஒருவரும் வெளியேற முடியாதோ அதைப் போன்று உரிய அனுமதி இன்றி எந்த ஒரு மரமும் வாகனங்களில் பயணப் படக்கூடாது. மரம் அறுக்கும் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். அனுமதியின்றி மரம் வெட்டும் முதலாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தனிநபரும் அவரால் முடிந்த வரை தாவரங்களை காக்க முயற்சி செய்தால் போதும்.
0 Comments