2025-ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்(THE WHITE BALLOON) திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்,MOVIE POSTER,MOVIE LINK கதைச் சுருக்கம்...ALL IN ONE


சென்ற ஆண்டை தொடர்ந்து 2025- 2026ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் "தி ஒயிட் பலூன். The White Balloon" திரைப்படமானது திரையிடப்பட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:







படத்தின் கரு மற்றும் கதை சுருக்கம்:

                                               தி ஒயிட் பலூன் (The White halloon) திரைப்படமானது இயக்குநர் ஜாயர் பாளாஹ் இயக்கிய ஒரு ஈரானிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் எழுத்தாளர் ஈராளின் புகழ்பற்ற இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான அப்பாஸ் கியாரோஸ்தாமி ஆவார்

ஈரானிய புத்தாண்டுக்கு முந்தையநாள்!


ரசீஹ்ம் அவளது தாயும் தெஹ்ரான் சந்தையில் புத்தாண்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கச் செல்கின்றனர். ரசீஹ் ஒரு கடையில் தங்கமீனைப் பார்த்து, வீட்டில் உள்ள தன் வீட்டின் குளத்தில் இருக்கும் ஒல்லியான மீன்களை விடவும் அவை செதில்கள் அதிகம் உள்ளதால் அழகாக உள்ளதாகவும் எண்ணி தன் தாயிடம் வாங்கி தருமாறு கேட்கிறாள்.



வீட்டிற்குச் செல்லும் வழியில், பாம்பு வித்தை காண ஆண்கள் கூட்டம் கூடியிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ரசீஹ் விரும்புகிறாள், ஆனால் அவளுடைய தாய் அதை காண அனுமதிக்கவில்லை. 


வீட்டிற்குத் திரும்பிய ரசீஹ் தனது தாயார் புதிய தங்கமீனை வாங்க அனுமதிக்க மறுத்ததால் வருத்தமடைந்தார். மேலும் தனது தாயைத் தொடர்ந்து வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டே இருக்கிறாள். 

பின்பு தனது அண்ணனான அலியும் ரசீஹ்-ற்கு ஆதரவு தர, மீனை வாங்க அனுமதி பெற்றுவிட்டனர்.தன் அம்மாவிடம் இருந்த கடைசி 500.டோமன் வாங்கிக் கொண்டு சிறு தொலைவில் உள்ள மீன் கடைக்கு காலி கண்ணாடி குடுவையுடன் ரசீஹ் புறப்படுகிறாள்.                                                           

அவள் செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்கள், இடர்பாடுகள் மற்றும் அதனை அவர்கள் கையாண்ட முறைகள் படத்தில் மிக எளிய நடையில் ஆழமான முறையில் விளக்கப்பட்டுள்ளது.


இத்திரைப்படம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை, விடாமுயற்சி, சிக்கலை எதிர்கொள்வதின் முக்கியத்துவம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாக அமையும்.



           😃MOVIE DOWNLOAD LINK: CLICK HERE









Post a Comment

0 Comments