2025-ஜுலை மாத சிறார் திரைப்படம்(TOP TEN MOVIES 2024-2025) திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்,MOVIE LINK,MOVIE POSTER,கதைச் சுருக்கம்...ALL IN ONE

2025-ஜுலை மாத சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

<;

சிறார் திரைப்பட மன்றம் நோக்கங்கள் (Movie Screening Club).

  • திரைப்படங்களை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல், திரைப்பட நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல், ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல்.
  • திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்படத் தயாரிப்பு மூலம் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துதல்.
  • கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத்தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல்.
  • சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
  • திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு திரைப்படம் தயாரிக்கும் அம்சங்களின் அடிப்படையில் போட்டிகளில் பங்கேற்க செய்தல்.
முக்கிய குறிப்பு : சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும், பிற மன்றச் செயல்பாடுகளைப் போல மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுதல் வேண்டும்.இவ்வாறு மாணவர் குழுக்களாக செயல்பாடுகளில் ஈடுபடும்போது,மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாக்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் அவரவர் குழு வெற்றி பெற தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்பு உருவாகும்.

சிறார் திரைப்படம் திரையிடுதல்:

அனைத்து அரசு நடுநிலை. மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில்
ஒவ்வொரு மாதமும். சிறார் திரைப்படம் திரையிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் EMIS தளத்தில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு முறையும் சிறார் திரைப்படத்தினை திரையிடுவதற்கு முன்பாகவே இணைப்பு-1ல் வழங்கப்பட்டுள்ள
அனைத்து நெறிமுறைகளையும் தலைமையாசிரியர் மற்றும் சிறார் திரைப்பட மன்றப் பொறுப்பாசிரியர் உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு மாதமும் அவரவர் பள்ளியில் 6-முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் (all classes and sections of grades 6 to 9) சிறார் திரைப்படமானது திரையிடப்படுவதை உறுதி செய்வது சிறார் திரைப்பட மன்றப் பொறுப்பாசிரியரின் பொறுப்பாகும்.

ஒவ்வொரு முறையும் சிறார் திரைப்படம் திரையிட்ட பின்னர், மாணவர்களை
மகிழ்முற்றம் மாணவர் குழுக்களாக (House System 5 Groups) பிரித்து, அவர்கள் பார்த்த திரைப்படம் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.ஒவ்வொரு முறையும் சிறார் திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு பின்வரும் செயல்பாட்டினை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • ஒவ்வொரு குழுவும் திரைப்படத்தின் மூலக்கரு / மையக்கருத்து குறித்தும்.அக்கருத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு குழுவும் திரையிடப்பட்ட படத்திற்கு இசைக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும்.
  • பின்னர்,இணைப்பு-3ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளில் பொறுப்பாசிரியர் ஏதேனும் ஒரு செயல்பாட்டினை தேர்ந்தெடுத்து மாணவர்களை மகிழ்முற்றம் மாணவர் குழுக்களாக பிரித்து அவர்களை அச்செயல்பாட்டினை மேற்கொள்ள செய்தல் வேண்டும்.
  • பின்னர், ஒவ்வொரு குழுவும் அவர்களின் படைப்புகளை வகுப்பறையில்காட்சிப்படுத்தி எடுத்துரைத்தல் வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு குழுவும் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்திய பின்னர். குழுக்களுக்கு ஆசிரியரால் மதிப்பெண்கள் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறாக வழங்கப்படும் மதிப்பெண்கள் Class Room Scoreboard - ல் சார்ந்த House Class Leader மூலம் பதிவிடப்படுதல் வேண்டும்.
  • பள்ளி மாணவர்களின் படைப்புகளை வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்துவதுடன், காலை வணக்கக் கூட்டத்தில் வெற்றிப் பெற்ற மாணவர் குழுவின் படைப்புகளை எடுத்துரைக்க செய்தல் வேண்டும்.
  • மேலும், பள்ளியளவிலான சிறந்த படைப்புகளை பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் (தேன்சிட்டு) இடம் பெற்றிட சிறார் திரைப்பட மன்ற பொறுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

2025-26 ஆம் கல்வியாண்டின் முதல் சிறார் திரைப்படம்:

கடந்த கல்வியாண்டில் மாநில அளவிலான சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தயார் செய்த குறும்படங்கள் "TOP-10(2024-25)" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு. 2025-26 ஆம் கல்வியாண்டின் முதல் சிறார் திரைப்படமாக ஜூலை மாதம் திரையிட திட்டமிடப்பட்டுளள்ளது. இவ்வாறு மாணவர்களின் படைப்புகளை திரையிடும்போது, அவர்களின் படைப்புகள் அங்கீகரிக்கப்படுவதுடன், அனைத்து மாணவர்களும் இச்செயல்பாட்டில் பங்குபெற ஊக்குவிக்கப்படுவர்.

MOVIE POSTER:


இணைப்பு-3

         சிறார் திரைப்படம் திரையிடப்பட்ட பின்னர் பொறுப்பாசிரியர் பின்வரும் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு செயல்பாட்டினை தேர்ந்தெடுத்து மாணவர்களை மகிழ்முற்றம் மாணவர் குழுக்களாக பிரித்து அச்செயல்பாட்டினை மேற்கொள்ளச் செய்தல் வேண்டும்.

  • திரைப்படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் யார்       என்பதையும் அதற்கான காரணத்தையும் எடுத்துரைத்தல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்தின் முடிவினை வேறொரு முடிவாக தங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எடுத்துரைத்தல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்தின் ஏதேனும் ஒரு பகுதியை (Scene) தேர்ந்தெடுத்து நடித்துக்காட்டுதல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்தினை பற்றி விமர்சனம் எழுதுதல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்தின் மையக்கருத்தினைக் கொண்டு தங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு வேறொரு கதையை எழுதி எடுத்துரைத்தல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்தின் ஏதேனும் ஒரு பகுதியை (Scene) தேர்ந்தெடுத்து அதற்கான வசனத்தை தங்களின் சொந்த நடையில் எழுதி நடித்தல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்தில் சிறந்த ஐந்து பகுதிகளை (Scenes) பற்றி எடுத்துரைத்தல்.
  • திரையிடப்பட்ட திரைப்படத்திற்கான விளம்பர திரைப்பட சுவரொட்டியை (Promotional Poster) உருவாக்குதல்.

கதை சுருக்கம்-டாப் 10

இயக்கம்: 6-9 வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள்
வெளியான ஆண்டு: 2024-25
மொழி: தமிழ்
திரைப்படத்தின் காலம்: 45 நிமிடங்கள்

கதை: 

          உங்கள் கண்களுக்கு காட்சியாக போகும் இந்த திரைப்படங்கள் ஒரே இடத்தில் அவர்களின் பன்முகத்தன்மையை இனம் கண்டு உருவாக்குவதற்காக ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும்.
எப்படி புரிந்து கொள்ள வேண்டும், ஒரு திரைப்படத்தின் திரைக்கதை என்பது என்ன? படத்தொகுப்பு என்பது என்ன? இயக்கம் என்பது என்ன? நடிப்பு என்பது என்ன? காட்சி அமைப்பு என்பது என்ன? என்பதெல்லாம் பல்வேறு ஆளுமைகளால் மூன்று நாள் பயிற்சி வகுப்பாக சொல்லித் தரப்பட்டு, அதன் பின் சிறார்கள்  தன்னுடைய  பார்வையில்  கதைகள் உருவாக்கி எடுக்கப்பட்டவை ஆகும்.அந்தக் கதைகளை சின்னஞ்சிறு கற்பனை கூட்டுக்குள் நட்பு என்றால் என்ன? நூலகம் என்ன செய்யும்- புத்தகம் எல்லாவற்றையும் விட உயரமானது, ஊனம் ஒரு தடை அல்ல, இயற்கையை நேசிப்போம். படித்தால் தான் உயர முடியும், ஒவ்வொருவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும்; என்று பறந்து விரிந்த பார்வையில் பண்பாட்டின் கலாச்சார கூறுகளை புரிந்து கொண்டவர்களாக மழலைகள் ஒரே நாளில் யோசித்து இயக்கி படத்தொகுப்பு செய்து இனிமையான இசை கோர்ப்போடு தந்தவைதான் இந்த படைப்புகள்.
                   இவை அனைத்தும் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள் சிறந்த படதொகுப்பாளர் இவர்கள் முன்னால் திரையிடப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்தபடத்தொகுப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை கோர்ப்பு என்று பல்வேறு விதமான விருதுகள் வழங்கப்பட்டு மழலைகளின் எண்ணம் திரை வானில் மின்னும் நட்சத்திரங்களாக நாளை உலா வர அவர்களுக்கு இந்தத் திரை மொழி பகிரப்பட்டு இன்றைக்கு உணர்வும் அறிவும் கலந்த உன்னதமாக உங்கள் பார்வைக்கு வருகிறது.

MOVIE DOWNLOAD LINK:👉 TOP TEN MOVIES(2024-2025)
















.

Post a Comment

0 Comments