நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!!!
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் முக்கியமான நோக்கமாக அமைகிறது.
திரைப்பட மன்றம் (மூவி கிளப்) நோக்கங்கள்:
- திரைப்படங்களை புரிந்துகொள்ளுதல், பல்வேறு வகைகள் மற்றும் கருப்பொருள்களுக்கு இடையில் வேறுபடுதல்,ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல்,விமர்சன ரீதியாக திரைப்பட நுட்பங்களைப் பகுப்பாய்வு செய்தல்,யோசனைகள் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல்.
- கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் இது சார்ந்த தொழில் ஆர்வத்தை ஊக்குவித்தல்.
- சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
- திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க செய்தல்.
- மாணவர்கள் தங்கள் எண்ணங்கள்,திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்படத் தயாரிப்பு மூலம் மற்றும் முன்னோக்குகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல்.
- கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் இது சார்ந்த தொழில் ஆர்வத்தை ஊக்குவித்தல்.
- சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
- திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க செய்தல்.
ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வாராத்தில் சிறார் திரைப்படம் திரையிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் முன்கூட்டியே மாதத்தின் முதல் வாராத்தில் EMIS வழியே தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டின் முதல் சிறார் திரைப்படமானது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தயாரித்த "டாப் 10" என்ற தலைப்பில், குழந்தைகள் தினத்தையொட்டி நவம்பர் - 2024 ஆம் மாதத்தில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் மனநலத்தினை செறிவூட்டுவதற்காக 14416 சிறப்பு எண் வசதியினை ஆசிரியர்கள் மற்றம் கழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட உள்ளது.
கதை சுருக்கம்-டாப் 10
இயக்கம்: 6-9 வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள்வெளியான ஆண்டு: ஏப்ரல் 2024
மொழி: தமிழ்
திரைப்படத்தின் காலம்: 45 நிமிடங்கள்
உங்கள் கண்களுக்கு காட்சியாக போகும் இந்த சிறார் திரைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் (Anna Cenanary Library) உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்தத் திரைப்படங்கள் மாணவர்களின் பன்முகத்தன்மையை இனம் கண்டு, ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும், எப்படி புரிந்து கொள்ள வேண்டும், ஒரு திரைப்படத்தின் திரைக்கதை என்பது என்ன? படத்தொகுப்பு என்பது என்ன? இயக்கம் என்பது என்ன? நடிப்பு என்பது என்ன? காட்சி அமைப்பு என்பது என்ன? என்பதெல்லாம் பல்வேறு ஆளுமைகளால் மூன்று நாள் பயிற்சி வகுப்பாக சொல்லித் தரப்பட்டு அதன் பின் சிறார்கள் தங்களுடைய பார்வையில் கதைகள் உருவாக்கி எடுக்கப்பட்டவை ஆகும். அந்தக் கதைகளை சின்னஞ்சிறு கற்பனை கூட்டுக்குள் நட்பு என்றால் என்ன? நூலகம் என்ன செய்யும்- புத்தகம் எல்லாவற்றையும் விட உயரமானது, ஊனம்ஒரு தடை அல்ல, இயற்கையை நேசிப்போம், படித்தால் தான் உயர முடியும், ஒவ்வொருவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும்: என்று பறந்து விரிந்த பார்வையில் பண்பாட்டின் கலாச்சார கூறுகளை புரிந்து கொண்டவர்களாக மழலைகள் ஒரே நாளில் யோசித்து இயக்கி படத்தொகுப்பு செய்து இனிமையான இசை கோர்ப்போடு தந்தவைதான் இந்த படைப்புகள்.
இவை அனைத்தும் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள் சிறந்த பட தொகுப்பாளர் இவர்கள் முன்னால் திரையிடப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை கோர்ப்பு என்று பல்வேறு விதமான விருதுகள் வழங்கப்பட்டு மழலைகளின் எண்ணம் திரை வானில் மின்னும் நட்சத்திரங்களாக நாளை உலா வர அவர்களுக்கு இந்தத் திரை மொழி பகிரப்பட்டு இன்றைக்கு உணர்வும் அறிவும் கலந்த உன்னதமாக உங்கள் பார்வைக்கு வருகிறது.
0 Comments