- NMMS என்பது தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
- நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது.
- CCEA வின் ஒப்புதலைப் பெற்ற பிறகு 2008 ஆம் ஆண்டு மத்தியத் துறைத் திட்டமான தேசிய வருவாய் மற்றும் திறனறி தேர்வுத் திட்டம் ( 'National Means-cum-merit Scholarship Scheme') தொடங்கப்பட்டது.
- பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், இடைநிற்றலைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படுகிறது.
- இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும்.உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- ஏப்ரல் 1, 2017 முதல் ஆண்டுக்கு 12000/-உதவித்தொகையாக வழங்கப்படுகிறது (முன்பு இது ஆண்டுக்கு ரூ. 6000/- ஆக இருந்தது).
2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மொத்தமாக ரூ.1827 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தகுதி வரம்பு:
- அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெற்றோரின் வருமானம் . ஆண்டுக்கு ரூ 3,50,000/- க்கு மேல் இல்லாத மாணவர்கள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
- ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கான தேர்வில் கலந்துகொள்வதற்கு மாணவர்கள் ஏழாம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேடு பெற்றிருக்க வேண்டும் (SC/ST மாணவர்களுக்கு 5% தளர்வு உண்டு).
- மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் வழக்கமான மாணவராகப் படிக்க வேண்டும்.
- என்விஎஸ், கேவிஎஸ் மற்றும் குடியிருப்புப் பள்ளிகளின் மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள்.
- மாநில அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு உண்டு.
தேர்வு முறை:
- மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாநிலமும்/யூனியன் பிரதேசமும் அதன் சொந்த தேர்வை நடத்துகிறது.
- 8ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு இத் தேர்வு நடத்தப்படுகிறது
- NMMS தேர்வின் கீழ் மன திறன் தேர்வு (MAT) மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்வு Scholastic Aptitude Test (SAT) ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
- தகுதியை பூர்த்தி செய்யும் மாணவர்கள், இந்த இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள்.
- SC/ST மாணவர்களுக்கு, இந்த கட் ஆஃப் 32% மதிப்பெண்கள்.
- அடுத்த உயர் வகுப்புகளில் ஸ்காலர்ஷிப் (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5% தளர்வு) தொடர பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உதவித்தொகையைத் தொடர, விருது பெற்றவர்கள் முதல் முயற்சியிலேயே பொது தேர்வுகளில் வெற்றி பெறுதல் வேண்டும்.
NMMS தேர்விற்கு பயன்படும் சிறந்த காணொளிகளை இந்த பதிவில் காணலாம்...
NMMS, TRUST,NTSE INTRODUCTION VIDEO👇👇👇
MAT EXAM-VIDEO-1
PROBLEMS ON BLOOD RELATION. PART-1 👇👇👇
MAT EXAM- VIDEO-2
PROBLEMS ON BLOOD RELATION PART-2👇👇👇
SOME MORE BLOOD RELATION QUESTIONS AND ANSWERS PDF 👇👇👇
0 Comments