THE JUNGLE GANG - அக்டோபர் மாத சிறார் திரைப்படம்- கதைச் சுருக்கம், MOVIE SCREENING PROCEEDINGS, MOVIE DOWNLOAD LINK,MOVIE POSTER.ALL IN ONE LINK..



👇👇CLICK HERE TO DOWNLOAD THE MOVIE SCREENING PROCEEDINGS


  

                "The Jungle Gang"  இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் கல்வி சார்ந்த வனவிலங்கு திரைப்படத் தொடர். வெவ்வேறு வாழ்விடங்களை ஆராய்வதற்கும், அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அனிமேஷன் செய்யப்பட்ட விலங்கு கதாபாத்திரங்களைப் பயன்படுத்துவது, இளம் பார்வையாளர்களை சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஈடுபடுத்துவதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான வழியாகும்.

MOVIE DOWNLOAD LINK 👉: CLICK HERE


படத்தில் மூன்று அனிமேஷன் விலங்கு கதாபாத்திரங்கள் உள்ளன - போ- தி பார் ஹெட் கீஸ்(வாத்து), குட்டு- தி ஸ்லெண்டர் லோரிஸ்(தேவாங்கு) மற்றும் பூரா- தி பிளாக் பக்(கருப்பு மான்). இந்த மூன்று நண்பர்களும் இந்தியாவின் மூன்று வெவ்வேறு வாழ்விடங்களின் சுவையைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஒன்றாகச் சென்று, அழிந்து வரும் விலங்குகளைத் தேடி, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவற்றின் வாழ்விடங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய கதைகள், அவை அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. வழியில், நண்பர்கள் தங்கள் சாகசங்களைச் செய்கிறார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் தங்கள் சொந்த குறும்புகளை செய்து விளையாடுகிறார்கள்.
அவர்கள் சந்திக்கும் விலங்குகள் இந்திய ஒரு கொம்பு காண்டாமிருகம், புலி, யானை மற்றும் சோம்பல் கரடி. இந்தத் தொடர் EARTH CARE நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தால் (WWF) (இந்தியா) ஆதரிக்கப்படுகிறது.
  • THE JUNGLE GANG- MEETS THE RHINO
  • THE JUNGLE GANG-MEETS THE THE TIGER
  • THE JUNGLE GANG-MEETS THE THE ELEPHANT
  • THE JUNGLE GANG-MEETS THE THE BEAR
பங்குதாரர்கள்: WWF-இந்தியா
இயக்குனர்: கிருஷ்ணேந்து போஸ்
கேமரா: கிருஷ்ணேந்து போஸ் மற்றும் தர்மா சிங்

கதைச் சுருக்கம்:

THE JUNGLE GANG MEETS THE RHINO:



மூன்று நண்பர்களாக, அவர்கள் காசிரங்கா தேசிய பூங்காவிற்கு ஒன்றாக பயணித்து,காசிரங்காவின் இயற்கை அமைப்பு, அங்கே உள்ள பிரம்மபுத்திரா நதி,  பெரிய இந்திய காண்டாமிருகம், அதன் தாய்ப்பாசம்,அதன் வாழ்விடங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் , வன அதிகாரிகள் செய்யும் பெரும் முயற்சி, காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம்,அவை எவ்வாறுஅழிவிலிருந்து காப்பாற்றப்படுகின்றன என்பது பற்றி குழந்தைகளுக்கான திரைக்கதையை வைத்தும், கதாபாத்திரங்களுக்கு சொந்தக் குரல் கொடுத்தும் இந்தப் படம் உருவாகியுள்ளது. காண்டாமிருகங்களின் வாழ்க்கைச் சுழற்சி, காசிரங்காவின் பருவங்கள் வழியாக கதை பின்னப்படுகிறது.


THE JUNGLE GANG-MEETS THE THE TIGER:



பின்னர் இந்தியாவின் மத்திய பகுதியை நோக்கி படம்  நகர்கிறது. மூன்று நண்பர்களும் இந்தியாவின் மத்திய பகுதிக்கு சென்று புலிகளை சந்திப்பது என்று முடிவு செய்தன.மத்திய பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த காடுகள் பற்றியும் பச்சோந்திகள் கழுகு மான்களின் வகைகள் புலிகளுக்கு பிடித்த மானினங்கள் புலிகளின் வேட்டையாடும் தன்மை புலிகள் எவ்வாறு தன் குடும்பத்தை பாதுகாக்கின்றது, தாய் புலியின் பாசம், குட்டிப்புலிகளின் சேட்டை,ஓநாய்கள் regurgitate செய்யும் முறை, மனிதன் புலிகளை வேட்டையாடுதல்,புலிகளின் உயிர் பெருக்கும் முறை,பல்வேறு மனிதர்கள் முன்னெடுக்கும் பாதுகாப்பு முயற்சிகள் என படம் நம்மை புலிகளின் பின்னே அழைத்துச் செல்கிறது.மிகவும் அழகான அமைதியான புலிகளை பார்க்கும்போது சாதுவான ஓர் பூனையைப் போல் தோன்றினாலும் அது எத்தகைய விலங்கு என்பதையும்,அதனை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் நமக்கு மிக அழகாக இந்த காணொளி விளக்குகிறது.


THE JUNGLE GANG-MEETS THE THE ELEPHANT:



இந்த மூவர் அணி அடுத்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள யானைகள் பற்றிய சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளனர் மிகப்பெரிய பிரம்மாண்டமான உயிரினமான யானைகள் எவ்வாறு குடும்ப அமைப்பில் வாழ்கின்றன குட்டி யானைகள் இடையே அவை கொண்டுள்ள பாசம் ஆண் யானைகளின் மூர்க்கத்தனம் பெண் யானைகளின் வழிகாட்டும் தன்மை குடும்பத்தை பாதுகாக்கும் முறை என யானைகளின் வாழ்வியல் முறை பற்றியும்,யானைகளை குழந்தைகள் பாதுகாக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து அருமையாக கதை அமைப்பு நகர்கிறது.


THE JUNGLE GANG-MEETS THE THE BEAR:



இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வாழக்கூடிய தேவாங்க இனக் கரடிகள் பற்றி மூவர் குழு நம்மிடம் பகிர்கின்றனர். கரடிகளின் வாழ்வு அமைப்பு அவை தங்கும் இடங்கள் கரடிகளின் உணவு முறை குட்டிகளின் மீதான தாய்ப்பாசம் கரடிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் கரடிகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, கரடிகளின் வாழ்வியலுக்கு ஏற்றவாறு காடுகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி உயிரோட்டமாகவும் குழந்தைகள் மனதில் பதியும் விதமாகவும் இந்த காணொளி முடிவடைகிறது. "LETS PRESERVE THE NATURE AND WILDLIFE"


THE JUNGLE GANG படம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. 


இந்தத் தொடரின் ஒட்டுமொத்த உற்பத்தி சுமார் 4 ஆண்டுகள் ஆனது. EARTH CARE FILMSக்கு வனவிலங்குகளை படம்பிடிப்பதே மிகப்பெரிய சவாலாகவும் தடையாகவும் இருந்தது. திரைப்படங்கள் புதுமையான தொழில்நுட்பத்துடன் மற்றும் இறுக்கமான படப்பிடிப்பு அட்டவணையின் கீழ் படமாக்கப்பட வேண்டும். கேனான் 7டி கேமராக்கள் தொடரை படமாக்க 1200 மிமீ லென்ஸுடன் பயன்படுத்தப்பட்டன. காசிரங்கா தேசியப் பூங்காவில் அசாமின் காண்டாமிருகங்களில் 90% க்கும் அதிகமானவை இருப்பதால், காண்டாமிருகத்தின் முதல் படம் ஆராய்ச்சி மற்றும் படமாக்குவது ஒப்பீட்டளவில் எளிதானது, ஆனால் கரடிகள் மற்றும் புலிகளைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதால் குழுவிற்குச் சற்று கடினமாக இருந்தது. விலங்குகளின் பருவங்கள், இருப்பிடங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றை குழு ஆய்வு செய்தது. மேலும், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், வனக் காவலர்கள் மற்றும் காப்பகங்களைச் சுற்றி வாழும் கிராம மக்கள் மற்றும் இந்திய வனவிலங்குகள் பற்றிய கணக்குகள் மற்றும் அறிவியல் இதழ்கள் ஆகியவை குழுவிற்கு வலுவான ஆதரவாக இருந்தன. 


JUNGLE GANGன் தோற்றத்தை அமைக்க 2டி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டது. 



திரைப்படம் திரையிட்ட பின் கேட்கப்பட வேண்டிய வினாக்கள்:



மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள்



👉MOVIE CLUB REGISTER - சிறார் திரைப்பட மன்ற பதிவேடு                 👉👉CLICK HERE TO DOWNLOAD

👉ஹருண்-அருண் சிறார் திரைப்பட வினாடி வினா HARUN- ARUN MOVIE QUIZ - CLICK HERE

👉ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER  MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE) CLICK HERE

👉HARUN-ARUN MOVIE DIRECT DOWNLOAD LINK WITH TAMIL CAPTIONS👉👉👉https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard

👉E.T Movie poster, கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு- JULY 2023 (ALL IN ONE) -👉👉click here

👉நிலா வினாடி வினா  -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் வினாடி வினா கேள்விகள்.👉👉click here

👉நிலா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்- வழிகாட்டு நெறிமுறைகள், NILA MOVIE POSTER , NILA MOVIE,  DOWNLOAD LINK, CHILDREN MOVIE REGISTER  (ALL IN ONE) 👉👉- click here

👉E.T -THE EXTRA TERRESTRIAL திரைப்பட  வினாடி வினா-JULY MONTH CHILDREN MOVIE QUIZ-2023👉👉 click here

TO DOWNLOAD THE JUNGLE GANG MOVIE: CLICK HERE

Post a Comment

0 Comments