
101சோத்தியங்கள் படத்தை பதிவிறக்கம் செய்ய QR CODE ஐ scan செய்யவும்👇👇👇
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் 12 வயது பாலன் என்னும் பெயர் கொண்ட சிறுவனை பற்றியது. பாலன் ஒரு ஆர்வமுள்ள மற்றும் தன்னைச் சுற்றி நடப்பவைகளை உற்று கவனிக்கும் சிறுவன். உலகத்தை மிகவும் ரசிக்கும் பாலன் கற்றலில் போராடுகிறான். பாலன் பயிலும் பள்ளியில் மாணவர்களுக்கு உலகத்தை பற்றிய 101 வினாக்களை கொண்டு வருவதற்கான போட்டியை அறிவிக்க, அதில் அவன் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறான்.
தனது வகுப்பு நண்பர்களின் கேலியையும் ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி பாலன் விட முயற்சியுடன் தனது வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பயணத்தை தொடங்குகிறான். விடைகளுக்கான அவனது பயணத்தில் சமூகத்தில் இருக்கும் முன் முடிவுகள், பிற்போக்கு சிந்தனைகள், அழுத்தங்கள் போன்ற பல தடைகளையும், எதிர்பார்ப்புகளையும் சந்திக்கிறான். இருப்பினும் தனது தாய் மற்றும் சில நல்ல மனிதர்களின் உதவியுடன் பாலன் படிப்படியாக அவன் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையும் அறிவையும் பெறுகிறான்.
அவனது ஒவ்வொரு வினாவும் அவனது சொந்த வாழ்க்கையில் இருந்து உருவாகிறது. வேலை வாய்ப்பில்லாத அன்பான அப்பா, படுக்கையிலேயே முடங்கி இருக்கும் தனது தங்கை என இருண்ட பக்கங்களில் பயணப்படுகிறான். அவன் வாழ்வின் இரண்டு பாதைகளும் ஒரு முடிவில் ஒன்றிணைகின்றன.
பாலனின் வினாக்களுக்கான பயணத்தின் மூலம் வினா மற்றும் அதன் விடைக்கான சிந்தனையின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனித்துவத்தையும் ஆதரித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இத்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்திய கல்வி முறையில் கற்றல் சவால்களைக் கொண்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் கல்விக்கு மேலும் உள்ளடக்கிய ஆதரவான அணுகுமுறைகளின் அவசியத்தையும் படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இறுதியில், அவன் வாழ்க்கையில் 101 வினாக்களையும் தொகுத்து முடித்த பாலன் 101-வது வினாவுக்கான விடையை மட்டுமே அவன் பெற விரும்புகிறான். அதற்கான விடையை அவன் பெறுவது தான் படத்தின் இறுதிக் காட்சி .
திரையிட்ட பின்:
- மாணவர்கள் ஒரு குழுவாக அல்லது தனி நபராக திரைப்படத்தைப் பற்றிய ஒரு செயல்பாடு செய்யலாம்.
- படத்தில் இருந்து ஒரு காட்சியை உருவாக்குதல்
- படத்தில் நடிக்கும் நடிகர்களைப் போலவே நடிப்பது
- கதாபாத்திரங்கள் தமிழில் பேசக்கூடியது போல் உருவாக்குதல்
- சில குறிப்பிட்ட காட்சிகளைப் பற்றி விவாதித்தல்
- இத்திரைப்படத்திற்கு வித்தியாசமான கதையை எழுத முடியுமா? அது வேறு ஒரு தொடக்கத்தையும் வேறு முடிவையும் கொண்டுருத்தல் வேண்டும்.
- இத்திரைப்படத்தை ஒரு நாடகமாக உருவாக்க முடியுமா? ஆம் எனில், குழுக்களாக உருவாக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- பள்ளி போட்டிட்கள் நடத்தி , வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற வைக்க வேண்டும்.
0 Comments