எளிய பெருக்கல் முறை-லாட்டிஸ் முறை (LATTICE METHOD)

எளிய பெருக்கல் முறை-லாட்டிஸ் முறை (LATTICE METHOD) 

  கணித அடிப்படை செயல்பாடுகள்(கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்)  அப்படின்னு சொல்லும் போது முக்கியமான ஒரு செயல்பாடா நாம பெருக்கல் சசொல்லுவோம்.மாணவர்கள் பெருக்கல் செயலை நல்லா செய்ய முடிந்தால் மட்டுமே வகுத்தலை பிழையின்றி சரியா செய்ய முடியும் அதனால பெருக்கல் ரொம்பவே முக்கியம் அப்போ அந்த பெருக்கல் முறையினை எல்லா குழந்தைகளும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கு ஆனா இன்றைய சூழலில் எல்லா குழந்தைகளும் பெருக்கல சரியா செய்றாங்களா? வாய்ப்பாடு நல்லா தெரியும் குழந்தைகள் கூட தவறுகள் செய்யறாங்க. இந்த தவறுகளை நீக்கி ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் பெருக்கல் செய்ய உதவக் கூடிய மிகச் சிறந்த முறையா இந்த லாட்டிஸ் முறைய சொல்லலாம். உண்மையிலேயே இந்த லாட்டிஸ் முறையை என் பள்ளி மாணவர்களிடம் நான் பயன்படுத்தி பார்க்கும் போது அவர்களிடம் இருந்த பெருக்கல் தொடர்பான பயம் முற்றிலும் விலகியது.மாணவர்களுக்கு கணிதத்தின் மேல ஒரு தனி ஆர்வம் ஏற்பட்டது இதுதானே ஒரு கணித ஆசிரியரான எனக்கு தேவை. சரி, இந்த முறையை இன்னும் எப்படி எளிமையாகிறது என்பதற்காகத் தான் இந்த பதிவு 


 லாட்டிஸ் முறையில் பெருக்குவது எப்படி என்று அறியப் போகிறோம்.



லாட்டிஸ் முறை  இடைக்காலங்களில் பயன்படுத்திய ஒரு பழமையான முறை தான் நாம் இன்று பயன்படுத்தும் வழக்கமான பெருக்கல் முறைக்கும் இந்த லாட்டிஸ் முறைக்கும் சின்ன சின்ன வித்தியாசம் தான் இருக்கு.



லாட்டிஸ் என்று கூகுளில் தேடினால் ஒரு பின்னல் தட்டி  என்ற விளக்கம் நமக்கு கிடைக்கிறது.  அதாவது ஒரு பின்னல் தட்டி போன்ற அமைப்பை பயன்படுத்தி எவ்வாறு நாம் பெருக்கல் செயல் செய்ய முடியும் என்பதை அறிய இந்த போஸ்ட் நமக்கு பயன்படப் போகிறது.



நாம் இதுவரை (POSITIONAL NUMBER SYSTEM)அதாவது  எண்களின் இடமதிப்பு முறையை பயன்படுத்தி  பெருக்கல் செயல் செய்து வந்துள்ளோம் நம் மாணவர்களுக்கும் இது போன்ற பெருக்கல் முறையையே கற்பித்துவருகின்றோம்.  

 
        
மாற்றாக இந்த லாட்டிஸ் .முறையின் சில நன்மைகளை பற்றிப் பார்ப்போம்
இந்த லாட்டிஸ் முறையில் பெருக்குவது பற்றி11படிநிலைகளில் விளக்கியுள்ளேன்முதலில் இந்த முறையை பயன்படுத்து போதுகுழப்பமாக இருப்பது போல் தோன்றும்.ஆனால் தொடர்ந்து செய்யும் போது மிகவும் எளிமையாக இருக்கும்... .எடுத்துக்காட்டா 74 x 25 என்ற பெருக்கல் செயலை லாட்டிஸ் முறையில் செய்வோம் வாங்க....

இவ்ளோ தாங்க இந்த முறை...புரியறதுக்காக ரொம்ப விளக்கமா சொல்லி இருந்தேன்...இதோ இப்ப இன்னும் சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்..

           அடுத்து 349x63ஐ லாட்டிஸ் முறையில் பெருக்குவோம்...
அடுத்து இன்னும் பெரிய எண்களான 5389  x 2765 ஐ பெருக்க எவ்வளவு எளிமையா இருக்கும் பாருங்க...
இப்ப சொல்லுங்க ...தனியா ஒரு நோட்ல போட்டுப் பார்தீங்களா?ரொம்பவுமே எளிமையான முறை..இது தொடர்பா மேலும் புரிந்து கொள்ள இந்த காணொலியைப் பாருங்க.....



இந்த எளிய பெருக்கல் முறை பிடிசிருக்கும்னு நினைக்கிறேன்.அனைவருக்கும் நன்றி. அடுத்து ஓர் அழகிய கணிதப் பதிவில் சந்திப்போம்.👍👍👍
.

This video in tamil tells us about "LATTICE METHOD OF MULTIPLICATION"Lattice multiplication in 3 digits easy method This method is same as the napier method..


For more useful MATHS VIDEOS SUBSCRIBE TO MATHS AND MATHS ONLY youtube channel ...https://www.youtube.com/channel/UCaLh5wuJFsvR4Co32yyzk_g



Post a Comment

0 Comments