Tuesday, 7 November 2023
THE JUNGLE GANG - அக்டோபர் மாத சிறார் திரைப்படம்- கதைச் சுருக்கம், MOVIE SCREENING PROCEEDINGS, MOVIE DOWNLOAD LINK,MOVIE POSTER.ALL IN ONE LINK..
படத்தில் மூன்று அனிமேஷன் விலங்கு கதாபாத்திரங்கள் உள்ளன - போ- தி பார் ஹெட் கீஸ்(வாத்து), குட்டு- தி ஸ்லெண்டர் லோரிஸ்(தேவாங்கு) மற்றும் பூரா- தி பிளாக் பக்(கருப்பு மான்). இந்த மூன்று நண்பர்களும் இந்தியாவின் மூன்று வெவ்வேறு வாழ்விடங்களின் சுவையைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஒன்றாகச் சென்று, அழிந்து வரும் விலங்குகளைத் தேடி, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவற்றின் வாழ்விடங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய கதைகள், அவை அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. வழியில், நண்பர்கள் தங்கள் சாகசங்களைச் செய்கிறார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் தங்கள் சொந்த குறும்புகளை செய்து விளையாடுகிறார்கள்.
இந்தத் தொடரின் ஒட்டுமொத்த உற்பத்தி சுமார் 4 ஆண்டுகள் ஆனது. EARTH CARE FILMSக்கு வனவிலங்குகளை படம்பிடிப்பதே மிகப்பெரிய சவாலாகவும் தடையாகவும் இருந்தது. திரைப்படங்கள் புதுமையான தொழில்நுட்பத்துடன் மற்றும் இறுக்கமான படப்பிடிப்பு அட்டவணையின் கீழ் படமாக்கப்பட வேண்டும். கேனான் 7டி கேமராக்கள் தொடரை படமாக்க 1200 மிமீ லென்ஸுடன் பயன்படுத்தப்பட்டன. காசிரங்கா தேசியப் பூங்காவில் அசாமின் காண்டாமிருகங்களில் 90% க்கும் அதிகமானவை இருப்பதால், காண்டாமிருகத்தின் முதல் படம் ஆராய்ச்சி மற்றும் படமாக்குவது ஒப்பீட்டளவில் எளிதானது, ஆனால் கரடிகள் மற்றும் புலிகளைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதால் குழுவிற்குச் சற்று கடினமாக இருந்தது. விலங்குகளின் பருவங்கள், இருப்பிடங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றை குழு ஆய்வு செய்தது. மேலும், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், வனக் காவலர்கள் மற்றும் காப்பகங்களைச் சுற்றி வாழும் கிராம மக்கள் மற்றும் இந்திய வனவிலங்குகள் பற்றிய கணக்குகள் மற்றும் அறிவியல் இதழ்கள் ஆகியவை குழுவிற்கு வலுவான ஆதரவாக இருந்தன.
Sunday, 5 November 2023
வருமான வரி கணக்கீடு 2023-2024 முக்கிய தகவல் WITH INCOME TAX CALCULATOR-2024
வருமான வரி கணக்கீடு 2023-2024- ஒரு முக்கிய செய்தி 🌺🌺🌺
இவ்வாண்டு வருமான வரி கணக்கிட நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன ஒன்று பழைய முறையில் வருமான வரி கணக்கிடுவது மற்றொன்று புதிய முறையில் வருமான வரி கணக்கிடுவது.
இதில் எது லாபமானது?
1. CPS ல் பணிபுரிந்து வருபவர்களின் மொத்த சம்பளம் ரூபாய் 10 லட்சம் முதல் 11 இலட்சம் எனில் அவர்கள் புதிய முறையில் வருமான வரி கணக்கிடும் போது பழைய முறையை விட புதிய முறையில் சுமார் 4000 முதல் 5 ஆயிரம் வரை அவர்களுக்கு குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.🌺🌺🌺
2. இதேபோன்று சிபிஎஸ் திட்டத்தில் பணியில் சேர்ந்து 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு முறை முறையில் 8000 முதல் 11 ஆயிரம் வரை அவர்களுக்கு குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.🌺🌺🌺
3. இதே நிலையில் ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 13 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 12,000 முதல் 15 ஆயிரம் வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்🌺🌺🌺
4. ஆண்டு வருமானம் 13 லட்சம் முதல் 14 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 20000 முதல் 23 ஆயிரம் வரை வருமான வரி குறைய வாய்ப்பு உள்ளது🌺🌺🌺
5. ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரையும் வருமான வரி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.🌺🌺🌺
6. GPF முறையில் பணி நியமனம் பெற்றவர்கள் ஆண்டு வருமானம் 14 லட்சம் முதல் 15 லட்சம் என இருந்தால் அவர்களுக்கு சுமார் 40 ஆயிரம் வரை புதிய கணக்கீட்டு முறையில் வருமான குறைய வாய்ப்பு உள்ளது.🌺🌺🌺
7. எனவே புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தையும் பழைய வருமான வரி கணக்கிட்டு படிவத்தையும் ஒப்பிட்டு பார்த்து ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தை (NEW TAX REGIME) தேர்ந்தெடுத்து நமக்கு எவ்வளவு வருமான வரி வரும் என்பதை இப்பொழுதே கணக்கிட்டு அதற்கேற்றவாறு தொகையினை பிடித்தம் செய்து கொள்ளுங்கள்🌺🌺🌺
8. அதிகமான தொகையை நீங்கள் பிடித்தம் செய்தால் அதை திரும்பி வாங்க இயலாது.🌺🌺🌺
9. ஏனெனில் நமக்கு ஏற்கனவே இன்கம் டேக்ஸ் டிமாண்ட் நோட்டீஸில் வருமான வரி அபராதத்துடன் கட்ட வேண்டும் என காட்டப்பட்டு உள்ளதால் அதிகமான தொகையை நீங்கள் பிடித்தும் செய்தால் அதை வருமான வருமான வரித்துறை அதைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.🌺🌺🌺
10. எனவே இப்பொழுதே திட்டமிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாராகுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.🌺🌺🌺
🌺🌺🌺வீட்டுக் கடன் பெற்று அதற்கு வட்டியாக ரூபாய் 2 லட்சம் செலுத்துபவர்களுக்கு பழைய வருமான வரி கணக்கீட்டு முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்🌺🌺🌺
எனவே வீட்டுக் கடன் வட்டியை கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி அதாவது இரண்டு லட்சத்திற்கு கீழாக வட்டி கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி எது குறைவாக வருகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளவும்.🌺🌺🌺
ஆண்டு வருமானம் 7 லட்சம் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டு முறைகளிலுமே வருமான வரி கட்டத் தேவையில்லை.🌺🌺🌺
🌺🌺🌺புதிய வருமான வரி கணக்கிட்டு படிவத்தின் படி 50,000 STANDARD DEDUCTION உண்டு.🌺🌺🌺
Income Tax Calculator 2024
ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களுடன் கூடிய 2023-24-ஆம் நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் வருமானவரிக் கணிப்பான் 2024 (M.S Excel வடிவில்)கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
https://arivuchaalaram.blogspot.com/2023/07/income-tax-calculator-2024.html
☝🏼 சேமிப்புகளுடன் மாற்றங்கள் ஏதுமற்ற பழைய வரிக் கணக்கீட்டு முறை - Old Regime
✌🏼 எந்தவிதத் வரித் தளர்வுமின்றி மொத்த வருமானத்தை நேரடியாக வரிக்குட்படுத்தும் புதிய முறை (7.5L-ற்குள் வருமானம் இருப்பின் வரி இல்லை) - New Regime
இரு முறைகளிலும் ஒரே நேரத்தில் கணக்கிட்டு உங்களுக்கு நன்மை பயக்கும் முறையில், நடப்பு ஆண்டிற்கான பூர்த்தி செய்யப்பட்ட வருமான வரிப் படிவத்தைப் Print செய்து கொள்ளுங்கள்.
(அகவிலைப்படி 42% & 46%க்கான நிலுவை முதல் உயர்வு 1 மாதத்திற்கும், இரண்டாம் உயர்வு 4 மாதங்களுக்கும் தானாகக் கணக்கிட்டுக் கொள்ளும்)
குறிப்பு :
இது அனைத்து வயதினருக்குமான (Individual - Senior Citizen - Super Senior Citizen) பொதுவான கணிப்பான் ஆகும். 60 வயதிற்கு உட்பட்டோருக்கு பிறந்த தேதி புதிதாக உள்ளிடத் தேவையில்லை. அதிலுள்ள தேதியே போதுமானது. மற்ற பிரிவினர் தங்களது பிறந்த தேதியை உள்ளிட்டால் அவர்களுக்கென உள்ள வரி வரம்பில் கணக்கீடு செய்யப்படும்.
THANKS TO THE RESPECTIVE BLOGGER🙏🙏🙏
Thursday, 19 October 2023
ஹருண்-அருண் சிறார் திரைப்பட வினாடி வினா HARUN- ARUN MOVIE QUIZ
ஹருண்-அருண்
சிறார் திரைப்பட வினாடி வினா
HARUN- ARUN MOVIE QUIZ
MOVIE CLUB REGISTER - சிறார் திரைப்பட மன்ற பதிவேடு 👉👉CLICK HERE TO DOWNLOAD
ஹருண்-அருண்- SEPTEMBER MOVIE POSTER MOVIE DOWNLOAD LINK ,கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு.(ALL IN ONE) CLICK HERE
E.T Movie poster, கதைச் சுருக்கம்,சிறார் திரைப்படமன்றப் பதிவேடு- JULY 2023 (ALL IN ONE) -👉👉click here
நிலா வினாடி வினா -ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம் வினாடி வினா கேள்விகள்.👉👉click here
Sunday, 15 October 2023
Division- simple method my school student's solving method
Division in Maths-an important aspect of real life.So it's more important to teach our kids an easy way...This is an easy way which I taught in my class.As a Maths teacher really I'm happy about my student's performance.Have a look at this...
The most important thing in division is writing the Multiplication tables... If you know how to write the tables of any digit number ,then you will be the master in Division...For writing the tables check this video...Using this easy trick I can make sure that every kid can do division easily...For more maths related videos subscribe to Maths and Maths only..
MOTIVATIONAL STORY-9 தலைவனுக்குரிய தகுதி
ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.
ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.
அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.
அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா?" என்று கேட்டார்.
"அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் "சரி" என்று சொல்லி சென்றுவிட்டார்.
அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.
மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.
இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.
அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.
அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.
"அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்?” என்று என்றார்.
"அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.
"புரியவில்லை” என்றார் அரசர்.
"எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.
அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.
மனதை கவர்ந்தது.
மரங்களை நடும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
மரங்களை நடும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவிடுகள்.
👉வேப்பம் மரம் 15' ×15'
👉பனை மரம். 10'×10'
👉பாக்கு மரம். 10'×10'
👉மலைவேம்பு மரம் .10'×10'
👉சந்தன மரம். 15'×15'
👉வாழை மரம். 8'×8'
👉தென்னை மரம். 24'×24'
👉பப்பாளி மரம். 7'×7'
👉மாமரம் உயர் ரகம். 30'×30'
👉மாமரம் சிறிய ரகம் 15'×15'
👉பலா மரம். 22'×22'
👉கொய்யா. 14'×14'
👉மாதுளை. 9'×9'
👉சப்போட்டா மரம். 24'×24'
👉முந்திரி மரம். 14'*14'
👉முருங்கை மரம். 12'×12'
👉நாவல் மரம். 30'×30'
இவ்வகையான
இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பது பல நூல்களும் நமக்கு கூறுகிறது
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!
என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரிய பின் பற்றி வந்து இருக்கிறார்கள்
#இடைவெளி அமைப்பதின் பயன்கள் !
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்றாக பரப்பி வளர முடிகிறது
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும் .
இதன்பின் காய்த்தாலும் திரட்சி இல்லாமல் காய்கள் சிறியதாக இருக்கும் . மரதேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால்
மரங்கள் குறைந்த உயரத்தில் அதோடு காய்கள் நன்கு பெறுத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
மரங்கள் அழிவதை தடுக்க நம்மால் முடிந்த முதல் வழி பேப்பர் உபயோகத்தை கட்டுப்படுத்துவது.
பேப்பர்களை பிரின்ட் எடுப்பதை தவிர்த்து ஈ செல்லான ஈ டிக்கெட் போன்ற மின்னணு முறைகளுக்கு மாறுவது.
தேவையற்றவைகளை பிரின்ட் எடுப்பது தவிர்த்துக் கொள்வது.
மர பர்னிச்சர்களுக்கு பதில் கடினமான மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் வகை பர்னிச்சர்களை பயன்படுத்தலாம்.
ஆயிரக்கணக்கான மரங்களை விளம்பரத்திற்காக நடாமல் சில நூறு மரங்களை நட்டு அது தானாகவே தன்னைக் காத்துக் கொள்ளும் நிலை வரும் வரை அதை நீரூறறி பராமரிக்க வேண்டும்.
வீடுகள் கட்டும்போது மர தளவாட பொருட்களை உபயோகப்படுத்தாமல் இரும்பில் வரும் தளவாட பொருட்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் இடத்திற்கேற்ப சின்னஞ்சிறு பூச்செடிகள் முதல் வீட்டிற்குள்ளேயே வளர்க்கக்கூடிய தாவரங்களையும் பெரிய இடம் உள்ளவர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெரு மரங்களிலிருந்து செடி கொடி தோட்டம் என அவரவர் ரசனைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். இதனால் சிறிய அளவிலாவது பிராண வாயுவின் உற்பத்தி கிடைக்கும்.
ஏர்போர்ட்டில் இருந்து உரிய கடவு சீட்டு இல்லாமல் எப்படி ஒருவரும் வெளியேற முடியாதோ அதைப் போன்று உரிய அனுமதி இன்றி எந்த ஒரு மரமும் வாகனங்களில் பயணப் படக்கூடாது. மரம் அறுக்கும் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். அனுமதியின்றி மரம் வெட்டும் முதலாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தனிநபரும் அவரால் முடிந்த வரை தாவரங்களை காக்க முயற்சி செய்தால் போதும்.
தன்னம்பிக்கை கதை-8 சிங்க ராஜா
ஒரு காட்டில சிங்கம் இருந்துச்சு. அது ஏப்பம் விட்டுச்சு. பக்கத்தில இருந்த யானை. "பேட் ஸ்மல்(கெட்ட நாற்றம்)" என்று சொல்லி முகம் சுளித்தது. சிங்கத்திற்கு கோபம் வந்து "நான் ராஜா நான் ஏப்பம் விடும் போது வாய் நாற்றம் அடிக்கிறது என்று முகம் சுளிக்கிறாய்? யூ ஆர் டிஸ்மிஸ்"என்று யானையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது.
அடுத்ததாக கரடியிடம் சிங்கம் கேட்டது. "என் வாய் நாற்றம் அடிக்கிறதா என்று? அதற்கு கரடி ராஜா "உங்கள் வாயிலிருந்து ஏலக்காய், கிராம்பு, சந்தனம், ஜவ்வாது என்று விதவிதமாக வாசமாக இருக்கிறது" என்று சொன்னது. அதற்கு சிங்கம் "எப்போதும் மாமிசமே சாப்பிடுகிற என் வாய் எப்படி நறுமணத்துடன் இருக்க முடியும? நீ ஜால்ரா அடித்து பொய் சொல்கிறாய்? யூ ஆர் டிஸ்மிஸ்" கரடியையும் பதவி நீக்கம் செய்தது.
இப்போது சிங்கம் மனம் பொறுக்க முடியாமல் நரியிடம் கேட்டது அதே கேள்வியை. அதற்கு நரி சொன்னது" ராஜா நான்கு நாட்களாக எனக்கு ஜலதோஷம். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றது. "யு கன்டின்யூ" என்று நரியின் பதவியை நீடித்தது.
கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது.
முதலாளிலாகளிடமோ, பணக்காரர்களிடமோ, தான் தான் அறிவாளி என்பவர்களிடமோ, பட்டும் படாமலும், விட்டு விலகாமலும், பக்குவமாக நாம் பேசவேண்டும்!!😃😃😃
POPULAR POSTS
-
MOVIE POSTER: திரைப்படத்தின் கதைக்கரு: KURANGU PEDAL MOVIE DOWNLOAD LINK:👉👉 CLICK HERE
-
QUALIFYING MARKS
-
NMMS 2020 MAT QUESTION PAPER WITH MARKED ANSWERS👇👇👇 FOR DETAILED FULL VIDEO LINK OF THIS 2020 MAT QUESTION PAPER 👉👉 CLICK HERE ...
8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide
MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...






















