SOME BEAUTIFUL TAMIL RHYME LYRICS FOR KIDS...
பாடல்-1
டம் டம் ... டும் டும் ... கச்சேரி
Dam Dam ... Dum Dum ... Kacheri
காக்கா அந்தப்பக்கம் கா, கா, கா ...
பாடல்-2
மரம் வளர்ப்போம்Maram Valarpoom
பூவே பூவே காய் தருவாய்
Poove Poove Kaai Tharuvaai
காயே காயே கனி தருவாய்
Kaaye Kaaye Kani Tharuvaai
கனியே கனியே விதை தருவாய்
Kaniye Kaniye Vidai Tharuvaai
விதையே விதையே செடி தருவாய்
Vidaiye Vidaiye Sedi Tharuvaai
செடியே செடியே மரம் தருவாய்
Sediye Sediye Maram Tharuvaai
மரமே மரமே மழை தருவாய்
Marame Marame Mazhai Tharuvaai
மரத்தை வளர்போம் மழை பெறுவோம்
Maraththai Valarpom Mazhai Peruvom
மகிழ்ச்சியோடு வாழ்ந்திடுவோம்
Magizhchchiyodu Vaazhnthiduvom
-கவிஞர் மு.செகசோதி
(Kavingnyar Mu. Jegajothi)
பாடல்-3
வானம் கறுத்தால் மழை பெய்யும்
Vaanam Karuththal Mazhai Peiyum
வானம் கறுத்தால் மழை பெய்யும்
Vaanam karuththaal mazhai peiyum
மழை பெய்தால் மண் குளிரும்
Mazhai peithaal mann kulirum
மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்
Mann kulirnthaal pul thazaikkum
புல் தழைத்தால் பசு மேயும்
Pul thazhaiththaal pasu meeyum
பசு மேய்ந்தால் பால் சுரக்கும்
Pasu meinthaal paal surakkum
பால் சுரந்தால் கன்று குடிக்கும்
Paal suranthaal kandru kudikkum
கன்று குடித்து மிஞ்சியதைக்
Kandru kudithu minjiyathai
கறந்து கொண்டு வந்திடலாம்
Karanthu kondu vanthidalaam
காய்ச்சி நாமும் குடித்திடலாம்
Kaaychi namum kudithidalaam
-கவிமணி. தேசிகவிநாயகம்பிள்ளை
(Kavimani DesikavinaayakamPillai)
பாடல்-4
வண்ண வண்ணப் பூக்கள்
Vanna Vanna Pookal
மல்லிகைப்பூவே! மல்லிகைப்பூவே!
Malligaipoove! Malligsipoove!
எங்கே போறிங்க?
Enge Poringa?
மஞ்சள் சாமந்தி பூத்துச்சான்னு
Manjal saamandi poothuchchann
பார்க்க போறேங்க!
Paarka Porenga!
சாமந்திப்பூவே! சாமந்திப்பூவே!
Saamandi Poove! Saamandi Poove!
எங்க போறிங்க?
Enge Poringa?
வெள்ளைத் தாமரை பூத்துச்சான்னு
Vellai Thaamarai poothuchchann
பார்க்க போறேங்க!
Paarka Porenga!
தாமரைப்பூவே! தாமரைப்பூவே!
Thaamarai Poove! Thaamarai Poove!
எங்க போறிங்க?
Enge Porimga?
சிவப்பு ரோஜா பூத்துச்சான்னு
Sivappu Roja poothuchchanu
பார்க்க போறேங்க!
Paarka Porenga!
ரோஜாப்பூவே! ரோஜாப்பூவே!
Roja Poove! Roja Poore!
எங்க போறிங்க?
Enge Poringa?
பத்தபூவைப் பறிச்சி
Poothapoovai parichi
உனக்குச் சூட்டப் போறேங்க!
Unakku Sootta Porenga!
பாடல்-5
புத்தி உள்ள காக்கை
Puththi Ulla Kaakkai
தாகம் உள்ள காக்கை ஒன்று கற்றி கற்றி வந்தது
குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டது
Thagam ulla kaakkai ondru suttri suttri vanthathu
Kudikka thanneer kidaikkamal migavum kashtappattathu
கிணறு ஒன்றை கண்டது
அருகில் ஒரு ஜாடியும் இருந்தது
Kinaru ondrai kandathu
Arugil oru jaadiyum irunthathu
ஜாடியின் மீது அமர்ந்தது
எட்டி எட்டி பார்த்தது
Jaadiyin meethu amarnthathu
Etti etti paarththathu
அடியில் தண்ணீர் இருந்தது
ஆனால் அதற்கு எட்டவில்லை
Adiyil thanneer irunthathu
Aanaal athrkku ettavillai
என்ன செய்தது? அது என்ன செய்தது?
கீழே கிடந்த கற்களை ஜாடியில் எடுத்து போட்டது
Enna seithathu? Athu enna seithathu?
Keezhe kidantha karkkalai jaadiyil eduththu poottathu
தண்ணீர் மேலே வந்தது
தாகம் தீரக் குடித்தது
Thanneer meele vanthathu
Thaagam theera kudiththathu
சந்தோஷமாய்ப் பறந்தது
காக்கை போல நாமுமே முயற்சி செய்ய வேண்டுமே
Santhoshamaai paranthathu
Kaakai poola naamume muyarchi cheyya veendume
பாடல்-6
குருவி பறந்து வந்ததாம்
Kuruvi Paranthu Vanthathaam
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
Kuruvi paranthu vanthathaam
Kuzhandai arugil nindrathaam
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா பிஸ்கட் கொடுத்ததாம்
Paavam atharkku pachiththathaam
Papaa biscut koduththathaam
காலில் இடுக்கிக் கொண்டதாம்
கடித்துக் கடித்துத் தின்றதாம்
Kaalil idukki kondathaam
Kadiththuk kadiththuth thindrathaam
களைப்பு தீர்ந்து பறந்ததாம்
காலையில் திரும்பி வந்ததாம்
Kalaippu theernthu paranthathaam
Kalaiyil thirumbi vanthathaam
0 Comments