BUNT - DECEMBER 2023-CHILDREN MOVIE-கதைச் சுருக்கம்,MOVIE SCREENING PROCEEDINGS,MOVIE POSTER,MOVIE DOWNLOAD LINK ALL IN ONE.டிசம்பர் மாத சிறார் திரைப்படம் "BUNT(முழு திரைப்படம்)"_*👇👇👇
'பன்ட்'(Bunt) தென் கொரியாவில் உருவான கொரியன் மொழி திரைப்படம். திரைப்படத்தின் கதையை எழுதியவர்கள் பார்க் கியூ-டே மற்றும் சோய் சுக்-ஹ்வான். இதனை பார்க் கியூ-டே அவர்களே இயக்கியும் உள்ளார்.
டோங்-கு, தினமும் பள்ளிக்குச் செல்வதை விரும்பும் பதினொரு வயது சிறுவன். நாள்தோறும் பள்ளி இடைவேளையின் போது மற்ற மாணவர்களுக்கு தண்ணீர் எடுத்து வருவதே அவனது ஒரே தலையாய பணியாக ஆசையோடு செய்கிறான். ஆனால் மாணவர்கள் பலர் அவனை முகத்திற்கு எதிரே கிண்டல்கேலி செய்கிறார்கள். மாறாக டோங்-கு அவர்களைப் பார்த்து புன்னகைக்கிறான்,எவ்வாறாயினும், அவன் இருப்பதில் பள்ளி குறைவான கவனம் காட்டுகிறது. தேர்வு நாட்களில், வகுப்பின் சராசரி தேர்ச்சி சதவிகிதத்தை குறைக்காமல் இருக்க, அவனது ஆசிரியர் அவனை வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்துகிறார்.
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிக்கு டோங்-கு மாற்றப்பட வேண்டும் என்று பள்ளி விரும்புகிறது. டோங்-குவின் தந்தைக்கு ஒரே ஒரு ஆசைதான், டோங்-கு எந்த தடையையும் தாண்டி வழக்கமான தொடக்கப் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்பதுதான். பல்வேறு குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு முடிவில் கடைசியாக ஒரு நல்ல செய்தி பிரகாசிக்கிறது, பள்ளியின் பேஸ்பால் அணிக்கு மேலும் மாணவர் தேவை என்று, இது டோங்-கு விற்கு பெரும் வாய்ப்பாக அமைகிறது. அவனுக்கு விளையாட்டு விதிகள் பற்றிய புரிதல் இல்லை என்றாலும் தனது புதிய பொழுதுபோக்காக மைதானத்தை அனுபவிக்கிறான். மேலும் அவன் அணியில் இருப்பதனால் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுகிறான் அவனது தந்தை ஜின்-கியூ தன் மகனை பற்றிய பொது சமூகத்தின் பார்வையையும் புரிதலையும் பொருட்படுத்தாமல் தன் மகன் மீது கூடுதல் அன்பும் கவனமும் செலுத்துவதோடு அவனது கனவு மெய்பட உழைக்கிறார். அதோடு தங்களின் வாழ்வாதாரத்திற்கும் போராடுகிறார்.சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் ஈடில்லா பங்களிப்பும் அரவணைப்பும் எத்தனை பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் அழகாகவும்,ஆழமாகவும் உணர்த்துகிறது இத்திரைப்படம்.
திரைப்படம் திரையிட்ட பின் உரையாட வேண்டியவை - கருத்து கேட்பு அமர்வு (feedback)
1. இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? 2. இத்திரைப்படத்தின் மூலக்கரு / மையக் கருத்து என்ன? 3. கதை எதைப் பற்றியது அல்லது யாரைப் பற்றியது? அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்? 4. கதையில் நிகழும் மிக முக்கியமான சம்பவங்கள் என்னென்ன? 5. தங்களை மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் எது? 6. திரைப்படத்தின் வாயிலாக தாங்கள் கற்றுக்கொண்ட முக்கிய கருத்துகள் என்னென்ன? 7. இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிகழ்விடம் படத்திற்கு எவ்வாறு சிறப்பு செய்கிறது? 8. இப்படத்தில் இசைக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது?
9. இத்திரைப்படத்தில், எந்த ஒரு கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் பின்னனிக்குரல் கொடுக்க விரும்புவீர்கள், அவ்வாறு விருப்பப்படின், ஒரு நிகழ்வில் அவர் விரும்பும் பாத்திரத்திற்கு பின்னனி குரல் கொடுக்க சொல்லலாம். 10. இத்திரைப்படத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுடன் உரையாடுவீர்களா ?மற்றும் அவர்கள் இப்படத்தை காண சொல்வீர்களா? ஏன்? 11.இத்திரைப்படம் பற்றி உங்களின் எண்ணங்களை 2 வரிகளில் எழுதுக.
மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள் (Spotlight questions)
1. கதையின் தொடக்கத்தில், இடையில் மற்றும் முடிவில் என்ன நடக்கிறது? 2. இந்த கதை எந்த இடத்தில் நடக்கிறது? 3. இந்த கதை எங்கு நடக்கிறது என்று எப்படி அறிவது? 4. திரைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனவா? 5. இக்கதை முக்கிய கதாபாத்திரத்தை தழுவி உள்ளதா அல்லது பிறரை சார்ந்து அமைகிறதா? 6. எந்த கதாப்பாத்திரத்திற்காவது குறிப்பிட்ட இசை அல்லது ஒலி கொடுக்கப்பட்டுள்ளதா? 7. எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காவது குறிப்பிட்ட வண்ணம் / வண்ணங்கள் தொடர்புடையதாக உள்ளதா?
8. கதையின் தொடக்கத்தில் நாம் எங்கிருந்தோம் என்று நினைக்கிறீர்கள்? 9. இந்தக் கதை எப்போது நிகழ்கிறது எனக் கூற முடியுமா? இந்த கதை கடந்த காலத்தை சார்ந்ததா அல்லது நிகழ்காலத்தைச் சார்ந்ததா என்பதை எப்படி அறிவீர்கள்? 10. இத்திரைப்டத்தின் முழுகருத்தையும் மூன்று நிமிடங்களில் உங்களால் நடித்துக் காட்ட முடியுமா?
Welcome to Maths and Maths Only! I'm Sumalatha Rajeshkannan, a passionate mathematics teacher dedicated to inspiring students and supporting fellow educators. Here, I share my love for maths through creative puzzles, clear explanations, and engaging resources designed for learners and teachers alike. Whether you’re looking to tackle challenging problems, discover new teaching strategies, or simply enjoy the beauty and logic of mathematics, this blog is your space. Join me as we explore the fascinating world of numbers, patterns, and problem-solving together—because with maths, there’s always more to discover!Even,you can search for materials for talents exams too.
0 Comments